Thursday, December 12, 2013

அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில்



                             அருள்மிகு பாடலாத்ரி நரசிம்மர் திருக்கோயில்
                                            சிங்கை -காஞ்சிபுரம் மாவட்டம் 


ஸ்தல வரலாறு :

 மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அநேகமாக நரசிம்ம  சுவாமி எல்லா முக்கிய திருத்தலங்களிலும் பல ரூபத்தில் எழுந்தளியிருக்கிறார். இறைவன் தூணிலும் இருப்பான், இரும்பிலும் இருப்பான். அவன் தான் மேலான தெய்வம். ஆகையால் பலராலும் வற்புறுத்தியும் பிரகலாதன் தன் தந்தையான இரணியனை கடவுளாக ஏற்றுக் கொள்ளவில்லை.


பிரகலாதன், இறைவன் தனக்கு காட்சி கொடுக்க வேண்டும் என்று பிரார்த்திக்கவில்லை. ஆனால் மகாவிஷ்ணுவானவர் சிறுபாலகனின் ஆணித்தரமான "இறைவன் எங்கும் உள்ளான்'' ன்ற சொல்லை நிலை நாட்டுவதற்காகவும், மெய்ப்பிக்கவும் மாலை வேளை துவாரப்ரதேசத்தில் (வாயிற்படியில்) நரமிருக ரூபியாய் (மனித உடல் சிங்கமும்) அவதாரம் செய்து நரங்களினாலே இரணியனை ஸம்ஹாரம் (வதம்) செய்தார்.

அதுசமயம் அவர் (மஹா உக்ரத்தில்) பெருஞ்சினத்துடன் மூன்று கண்களுடன் காணப்பட்டார். இத்திருக்கோவிலைச் சுற்றி அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் ஸப்த (ஏழு) ரிஷிகளுள் ஒருவரான ஜாபாலி இறைவனை நேரில் காண வேண்டி தவமிருந்தார். அவரின் வேண்டுக்கோளுக்கிணங்கி இரணியனை ஸம்ஹாரம் செய்த திருக்கோலத்துடன் உக்கிர நரசிம்மராக அதே கோபத்துடன் இந்த திருத்தலத்தில் சிறு குகையினுள் காட்சி கொடுத்ததாக  புராணத்தில் விரிவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டுள்ளது.





இந்த கோவில் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த குடவரை கோவிலாகும். இதில் கிழக்குமுகமாக அமையபெற்ற ஒரு தள கோபுரம் ஒரு பாறையின் மீது அமைக்கப்பட்டுள்ளது


சுவாமி குகைக்குள் வீற்றிருப்பதால் கோவிலை வலம் வருபவர்கள் சுமார் நூறு படிக்கட்டுகள் கொண்ட சிறு குன்றினையும் சேர்த்து தான் வலம் வரவேண்டும் ஆகையால் இக்கோவிலுக்கே உரித்தான த்ரிநேத்ர தரிசனம், கிரிவலம் இக்கோவிலின் சிறப்பாகும்.

தெய்வீக அதிசயகுணம் படைத்த அழிஞ்சல் மரம் இதன் சிறப்பு நாச்சியார் திருமொழியின் விரிவுரையில் 44-வது பாசுரத்தில் விளக்கப்பட்டுள்ளது.....


கோவில் விவரங்கள் :

         மூலவர்                 :       பாடலாத்ரி நரசிம்மர்
                   உற்சவர்                 :       பிரகலாதவரதர்
                  அம்மன்/தாயார்           :       அஹோபிலவல்லி
                   தல விருட்சம்           :       பாரிஜாதம்
                  தீர்த்தம்                  :       சுத்த புஷ்கரிணி
                 ஆகமம்/பூஜை            :       வைகானஸம்
                 பழமை                   :       1000-2000 வருடங்களுக்கு முன்
                 ஊர்                      :       சிங்கப்பெருமாள் கோயில்
                மாவட்டம்                :       காஞ்சிபுரம்

                மாநிலம்                  :       தமிழ்நாடு




தெய்வீக அதிசயகுணம் படைத்த அழிஞ்சல் மரம் இதன் சிறப்பு நாச்சியார் திருமொழியின் விரிவுரையில் 44-வது பாசுரத்தில் விளக்கப்பட்டுள்ளது. மணமாகாதவர்களும்,  குழந்தை பேறு இல்லாதவர்களும்,  மாமேதை ஆகும் எண்ணம் உள்ளவர்களும் தாங்கள் அணிந்திருக்கும் ஆடையிலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்தெடுத்து இம்மரத்தின் கிளையில் எம்பெருமானை நினைத்து ஒரு நுனியில் கட்டி மரத்தின் அடியில் மஞ்சள், குங்குமம் பூசி, நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்தால் அருள்கிட்டும். இது மகான்கள் கண்ட உண்மை. தெய்வாம்சம் பொருந்திய மரம் கோவில் கிரி பிரதட்சிணத்தில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது.

ஜாபாலி மகரிஷி நரசிம்மரின் தரிசனம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் பிரதோஷ வேளையில் மகரிஷிக்கு தரிசனம் தந்தார். இதன் அடிப்படையில் இத்தலத்தில் பெருமாளுக்கு பிரதோஷத்தன்று திருமஞ்சனம் நடக்கிறது.




 மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரின் திருவடியிலும், ரத சப்தமி நாளில் நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படுகிறது. எனபது சிறப்பம்சம்.பின் நாம் படி இறங்கி வரும்போது நேரே இலட்சுமி நரசிமர் வீற்று இருக்கிறார்
இறைவனின் இடது தொடையில்  அமர்ந்து இருக்கிற லட்சுமி தேவியின் இடது கையில் தாமரையும் வலக்கை நரசிம்மரின் இடுப்பை சுற்றிய நிலையில் காணபடுகிறது  நரசிம்மரின் பின்கைகள் சங்கு சக்கரம் ஏந்த வலமுன் கை காக்கும் குறிப்பில் உள்ளது.



முடிந்த வரை இக்கோவில் சென்று தரிசித்து வாருங்கள் 



                                         ஒம் நமோ நாராயணா 
                                                           












No comments:

Post a Comment